பாகிஸ்தானின் அலுவலக மொழியாகிறது சீனாவின் மண்டாரின் - Yarl Voice பாகிஸ்தானின் அலுவலக மொழியாகிறது சீனாவின் மண்டாரின் - Yarl Voice

பாகிஸ்தானின் அலுவலக மொழியாகிறது சீனாவின் மண்டாரின்

பாகிஸ்தானின் அலுவலக மொழியாகிறது சீனாவின் மண்டாரின்
பாகிஸ்தானின் அலுவலக மொழியாகிறது சீனாவின் மண்டாரின்
இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங்கிற்கும் இடையே நல்லுறவை வளர்க்கும் விதமாக உருது மற்றும் ஆங்கிலம் போன்று சீனத்தின் மண்டாரின் மொழியையும் அலுவலக மொழியாக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.

திங்கட்கிழமையன்று பாகிஸ்தானிய செனட்டில் இது தொடர்பாக ஒரு தீர்மானம் இயற்றப்பட்டது., பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளை கருத்தில் கொண்டு அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் ஆங்கிலத்திற்கு அடுத்தப்படியாக அதிக மக்கள் பேசும் மொழி சீன மொழியான மண்டாரின்.

பாகிஸ்தானில் 44% பேருக்கு பஞ்சாபி முதன்மையான மொழியாகவும், 15.42% மக்கள் பாஷ்தோ மொழியும், 14.5% சிந்தி மொழியிலும் 4% பாலோச்சியிலும் பேசுகின்றனர். இருப்பினும், பொதுவான மொழிகளை ஒதுக்கி விட்டு, பாகிஸ்தான் மண்டாரின் மொழியை சேர்க்க திட்டமிட்டது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

”70 ஆண்டு காலத்தில் பாகிஸ்தான், மக்களுடைய தாய்மொழியாக இல்லாத ஆங்கிலம், உருது, அரபிக் போன்ற மொழிகளை வளர்த்தது. இப்போது சீன மொழியின் மூலம் தனது சொந்த மொழிகளை புறக்கணித்து மற்ற மொழிகளுக்கு ஊக்கமளிக்கிறது” என  பாகிஸ்தானின் அமெரிக்க தூதுவர் ஹுசேன் ஹக்கானி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் மண்டாரினை அலுவலக மொழியாக மாற்றும் இந்த முடிவை ஆதரிக்கின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post