40 சபைகளில் த.தே.கூ ஆட்சியமைக்கும் -மாவை- - Yarl Voice 40 சபைகளில் த.தே.கூ ஆட்சியமைக்கும் -மாவை- - Yarl Voice

40 சபைகளில் த.தே.கூ ஆட்சியமைக்கும் -மாவை-

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கரூபவ் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மை பெற்ற 40 சபைகளில் ஆட்சியமைக்கும் என்று
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும்ரூபவ் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

உள்ளுராட்சி மன்றங்களின் வடக்க மற்றும் கிழக்க மாகாணங்களில் உள்ள 56 சபைகளில் 40 சபைகளில் தமிழ் தேசியக்
கூட்டமைப்பு அதிக ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் கஜேந்திரகுமார் தலைமையிலான அணியினர் வெறுமனே 2
சபைகளிலேயே அதிக ஆசனங்களை கைப்பற்றியுள்ளனர்.
இதன்படி பெரும்பான்மையான ஆசனங்களை பெற்ற கட்சி நிர்வாகத்தை அமைத்துக் கொள்ளும் என்ற கோட்பாட்டின்
அடிப்படையில் நாங்கள் அதற்கான நடவடிககைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இதனடிப்படையில் பெரும்பான்மையை கொண்ட அரசியல் கட்சிகள் அந்தந்த இடங்களில் ஆட்சிமைப்பதற்கு ஏனையவர்கள்
ஒத்துழைத்துச் செயற்பட வேண்டுமெனவம் நிர்வாகத்தைக் குழப்பக் கூடாது என்றும் நாங்கள் பகிரங்கமாக கோரிக்கை
விடுத்திருக்கின்றோம்.

அதனை ஏற்றுக் கொள்ளாமல நிர்வாத்தைக் குழப்புகின்ற வகையிலையே அவர்களின் செயற்பாடுகள் அமைகின்றன. எமது
கட்சி பெரும்பான்மையான ஆசனங்களை பெற்றுக் கொள்ளாத சபைகளில் வேறு கட்சிகள் நிர்வாகத்தை நடத்துவரை நாங்கள்
குழப்பமாட்டோம்.
எனவே உள்ளுராட்சி மன்றத்தை அரசியல் மயமாக்காது தோற்படிப்பது என்றில்லாமல் செயற்பட வேண்டும். ஆனால்
தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிப்பது தான் இந்தத் தேர்தலில் மட்டுமல்ல ஒவ்வொரு தேர்தலில்ம் கஜேந்திரகுமார்
அணியினர் கூறி வருகின்றனர்.

இப்பொழுதும் அப்படிப் பெரும்பான்மையை பெற்று ஆட்சியை நடத்த முன்வந்திருக்கின்ற போதும் எங்களைத்
தோற்கடிக்கப்போதாக கூறுகின்றார். நாங்கள் பெற்றது ஆவனங்களின் எண்ணிக்கை போன்று வேறு யாரும்
பெறவில்லை.

நாங்கள் பெரும்பான்மை பெற்ற 40 சபைகளிலும் கூட்டமைப்பு ஆட்சிமைக்கும். அதனைக் குழப்புவது தமிழ் தேசத்தின்
எதிர்காலத்தை பாதிக்கும்.

பெரும்பான்மை பெற்றவர்களை அந்தச் சபைகைள நிர்வாகிக்க விடுவது தான் போரால் பாதிக்கப்பட்ட மக்களையும்
பிரதேசத்தையும் கட்டியெழுப்ப உதவும். அவ்வாறு ஏந்தெந்த கட்சிகள் பெரும்பான்மை பெற்றதோ அந்த கட்சியை நிர்வாகம்
செய்ய விடுவதுதான் பொருத்தமானது.

நாங்கள் ஒத்துழைத்துச் செயற்பட அழைப்ப விடுத்திருக்கின்ற போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்
கNஐந்திரகுமார் பொன்னம்பலம் உண்மைக்குப் புறம்பான கதைகளைக் கூறி எல்லாவற்றையும் குழப்புகின்ற நடவடிக்கைகளை
முன்னெடுத்து வருகின்றார்.

ஆகவே கட்டுக்கதைகள் கட்டுவதை விடுத்து குழப்பமால் இருக்குமாறு நாங்கள் அவரிடம் கேட்டுக் கொள்கிறோம். இரகசிய
வாக்கெடுப்ப ஏங்கள் கட்சியின் உறுப்பினர்கள் கட்சி மாறிச் செல்வார்கள் என்ற அடிப்படையில் எந்தவித
அச்சுறுத்தலையும் விடுக்கவில்லை.

கட்சி மாறினால் நடவடிக்கை என்பது அச்சுறுத்தும் வகையில் சொன்ன கருத்தல்ல. அது எங்கள் உறுப்பினர்கள் ஒற்றுமையாக
இருக்க வேண்டுமெபதற்காகவே சொல்லப்பட்டிருக்கிறது. அவர் கூறுகின்ற கட்டுக் கதைகளில் இதுவும் ஒன்றாகவே நாம்
பார்க்கின்றோம்.

நாங்கள் வெற்றி பெற்ற சபைகளிலும் அவர்கள் தான் போட்டியிடப் போதாகச் சொல்லியிருக்கின்றனர். ஆகவே
அவ்வாறான நிலைமைகள் வருகின்ற போது அதனை நிராகரிக்க வேண்டும்.

ஐனநாயகத்திற்கு விரோதமாக எங்கள் பலத்தை தோற்கடிப்பதற்கு அவர்கள் முயற்சி எடுக்கின்றனர். எங்கள் கட்சியிரை
ஒற்றுமையாக இருங்கள் என்று வற்புறுத்தினால் அது கNஐந்திரகுமாரின் திட்டத்துக்கு பாதிப்பாக மாறிவிடும்.
இதனால்தான் நாங்கள் அச்சுறுத்துகின்றோம் என்று கதை செல்லுகின்றார்.

ஆகவே அவர் கூறுவது போன்று இரகசி வாக்கெடுப்பு நடாத்த வேண்டுமென்று சொல்வதை நிராகரிக்கின்றோம். சட்ட
விதிகளின் படி அதற்கான விதி முறைகள் இருந்தாலும் அதைப் பற்றி நாங்கள் யோசிக்கவில்லை என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post