-இறுதி நேர பிரசார யுக்தி- புலிகளின் எழுச்சிப் பாடல்களுடன் களம் இறங்கியது தமிழரசுக் கட்சி - Yarl Voice -இறுதி நேர பிரசார யுக்தி- புலிகளின் எழுச்சிப் பாடல்களுடன் களம் இறங்கியது தமிழரசுக் கட்சி - Yarl Voice

-இறுதி நேர பிரசார யுக்தி- புலிகளின் எழுச்சிப் பாடல்களுடன் களம் இறங்கியது தமிழரசுக் கட்சி

உள்ளுராட்சித் தேர்தல் பிரசாரம் பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மக்களைக் கவரும் இறுதி நேர பிரசார யுக்திகளில் ஒன்றாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எழுச்சிப் பாடல்களுடன் தமிழரசுக் கட்சியும் கையிலெடுத்துக் களமிறங்கியுள்ளது.

பாஷையூரில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் “நடந்து வந்த பாதை தன்னை திரும்பிப் பாரடா” என்ற எழுச்சிப் பாடல் பிரசாரத்தின் இடையே ஒலிபாரப்பப்பட்டது.

இந்த கூட்டத்தில் தமிழரசுக் கடசியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்.மாநாகர சபை முதல்வர் வேட்பானர் இ.ஆனோல்ட் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களுடன் மக்கள் முன் தேர்தல் பரப்புரைகளை ஈடுபட்டிருந்தது.

தமிழரசுக் கட்சித் தலைவர்கள் சிலர் உள்ளிட்ட பல தரப்புக்காளால் இது குறித்த வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் இறுதி நேர பிரசார யுத்தியாக எழுச்சிப் பாடல்களுடன் தமிழரசுக் கட்சி களமிறங்கியுள்ளமு குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post