உள்ளுராட்சி தேர்தல் நிலைப்பாடு பல்கலைகழக மாணவர்கள் ஆராய்வு -மக்களை தெளிவுபடுத்தும் அறிக்கை வெளியாகும்- - Yarl Voice உள்ளுராட்சி தேர்தல் நிலைப்பாடு பல்கலைகழக மாணவர்கள் ஆராய்வு -மக்களை தெளிவுபடுத்தும் அறிக்கை வெளியாகும்- - Yarl Voice

உள்ளுராட்சி தேர்தல் நிலைப்பாடு பல்கலைகழக மாணவர்கள் ஆராய்வு -மக்களை தெளிவுபடுத்தும் அறிக்கை வெளியாகும்-

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுப்பது தொடர்பில் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இப்பேச்சுவாத்தையின் முடிவில் மக்களுக்கான கோரிக்கையை  முன்வைத்து  அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கும் மாணவர் ஒன்றியங்கள் தயாராகி வருகின்றன.

எதிர்வரும் 10 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தமது பிரச்சார நடவடிக்கைகளில் மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதேவேளை, பொது அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்களைச் சந்தித்து தத்தமது கட்சிகளுக்கு ஆதரவு கோரும் வேலைத்திட்டங்களும் கட்சிகள் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடக்கிலுள்ள யாழ்.பல்ககை;கழக  மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஆகியோரை கட்சிகள் அணுகி தமக்கு ஆதரவளிக்குமாறு கோரழ பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன. ஏனினும் அப்பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எவையும் எடுக்கப்படவில்லை.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது யாழ்.பல்கலைக்கழக பீடம் ஒன்றின் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எந்தக் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளாமல் தனிப்பட்ட முறையில் ஒரு கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பகிரங்கமான அறிக்கையை வெளியிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இம்முறை தேர்தலில் அவ்வாறான ஒரு சம்பவம் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய மாணவர்கள் ஒனியங்கள் உறுதியாகவுள்ளன.

இதற்காக யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீடங்களில் மாணவர் ஒன்றியம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன மாணவர்களிடையே கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன.

இக்கலந்துரையாடலின் அடுத்த கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஒன்றாக சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

அக்கலந்துரையாடலின் முடிவில் வடக்க, கிழக்கு தமிழர் தாயகத்தில் உள்ள மக்களைக் கோரும் அல்லது தெளிவுபடுத்தும் தேர்தல் சம்மந்தமான அறிவித்தல் ஒன்றினை வெளியிடவும் மாணவர் ஒன்றியங்கள் தயாராகி வருகின்றன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post