நீதிமன்ற தீர்ப்பை கூல் பெய்கூறி விமர்சிப்பது கண்டணத்திற்குரியது -கு.குருபரன்- - Yarl Voice நீதிமன்ற தீர்ப்பை கூல் பெய்கூறி விமர்சிப்பது கண்டணத்திற்குரியது -கு.குருபரன்- - Yarl Voice

நீதிமன்ற தீர்ப்பை கூல் பெய்கூறி விமர்சிப்பது கண்டணத்திற்குரியது -கு.குருபரன்-

நீதிமன்ற வழக்கு நடவடிக்கை தொடர்பில் அப்பட்டமான பெய்களை கூறியுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பனர் ரட்ணஜீவன் கூல் நீதிமன்ற நீயாயாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளார் என்று யாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் கு.குருபரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நீதிமன்றம் பக்கச்சார்பாக நடந்து கொள்ளுகின்றது என்ற தோரணையில் அவர் வெளியிட்டிருக்கும் பொய்கள் வண்மையான கண்டனத்திற்குரியவை என்றும் தெரிவித்த அவர் நீதிமன்ற விசாரணைகளில் தலையிட்டு, அதனை மடைமாற்றி, ஒரு திசை நோக்கி திருப்புவது என்பது தண்டணைக்குரிய குற்றம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மல்லாகம் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூல் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் இன்று நண்பகல் யாழ்.ஊடகா அமையத்தில் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம்தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

மாவட்ட புரம் கந்தசாமி ஆலயத்தில் சைக்கில் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் பேரவை பிரச்சார நடவடிக்கை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்ட தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் தேர்தலகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் கூல் என்பவர் பிழையாக சித்தரித்து பெய்களை கூறியுள்ளார்.

குறிப்பாக அவ்வழக்கு நடவடிக்கைகளில் பொலிஸார் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்றும், ஆதாரங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் உண்மைக்கு புறம்பான விடயங்களை தெரிவித்துள்ளார்.

வழக்கு நடவடிக்கைகளை முழுமையாக அறிந்து கொள்ளாமல் பெய்யான தகவலை கூல் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் முன்னால் வந்திருக்கும் ஒரு விடயத்தின் விசாரணைகளில் தலையிட்டு, அதனை மடைமாற்றி, அதனை ஒரு திசை நோக்கி திருப்புவது என்பது தண்டணைக்குரிய குற்றம். இந்த அடிப்படைய கூட அவருக்கு தெரியதா? என்றும் குருபரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேவ்வேறு நிறுவனங்களில் எவ்வாறான வகிவாகங்களில் இருந்தார், அதில் நடந்த வரலாறு பற்றி என்னால் பேச முடியும். ஆனால் நான் அதை பேசப்போவதில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post