தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புசபை அலுவலகர்கள் பணிப்புறக்கணிப்பில் - Yarl Voice தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புசபை அலுவலகர்கள் பணிப்புறக்கணிப்பில் - Yarl Voice

தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புசபை அலுவலகர்கள் பணிப்புறக்கணிப்பில்

நாடு தழுவிய ரீதியில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதனடிப்படையில் யாழ்ப்பாணத்திலும் இப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இவ் ஆண்டிற்கான 25 சதவிகித சம்பள உயர்வை தாமதமின்றி வழங்க வேண்டும்இ ஏற்கனவே காணப்படுகின்ற சம்பள முரண்பாடுகள் சரி செய்யப்படல் வேண்டும் இ அரச மற்றும் தனியார் கூட்டமைப்பு நிறுத்தப்படல் வேண்டும்இ இதன் உத்தியோகத்தர்களின் குழந்தைகளுக்கு  10 வீத வேலை வாய்ப்பை மீள உறுதிப்படுத்த வேண்டும்இ பொது முகாமையாளருக்கு நிறைவேற்று அதிகாரம் வழங்குவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்தே இவ் அடையாள வேலை நிறுத்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பாக இப் போராட்டம் தொடர்பாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் யாழ்.பிராந்தி முகாமையாளர் ஜெகதீஸ் கருத்து தெரவிக்கையில்இ

தமது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அதனை வலியுறுத்தியே இப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும்இ தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post