நயன்தாராவை பின் தள்ளி முன்னால் வந்த ஓவியா! - Yarl Voice நயன்தாராவை பின் தள்ளி முன்னால் வந்த ஓவியா! - Yarl Voice

நயன்தாராவை பின் தள்ளி முன்னால் வந்த ஓவியா!

நயன்தாராவை பின் தள்ளி முன்னால் வந்த ஓவியா!
நயன்தாராவை பின் தள்ளி முன்னால் வந்த ஓவியா!
தமிழ் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலாம் ஆனவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான ஓவியா, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப்பின் மிகவும் பிரபலமானார். அவரின் முகபாவனங்கள், தைரியமாகவும், வெளிப்படையாகவும் பேசும் தன்மை அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. 
இந்நிலையில், சென்னை டைம்ஸ் பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் 2017ம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண்ணாக ஓவியா முதலிடத்தில் இருக்கிறார். நடிகை நயன்தாரா இரண்டாம் இடத்தில் இருக்கிறார். நடிகை அமலாபாலுக்கு 28வது இடம் கிடைத்துள்ளது. அதேபோல், நடிகை ஹன்சிகா கடைசி இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post