பார்சலை வாங்கியதும் மயங்கி விழுந்த டிரம்ப் மருமகள் - விஷக்கிருமியா? - Yarl Voice பார்சலை வாங்கியதும் மயங்கி விழுந்த டிரம்ப் மருமகள் - விஷக்கிருமியா? - Yarl Voice

பார்சலை வாங்கியதும் மயங்கி விழுந்த டிரம்ப் மருமகள் - விஷக்கிருமியா?

பார்சலை வாங்கியதும் மயங்கி விழுந்த டிரம்ப் மருமகள் - விஷக்கிருமியா?
பார்சலை வாங்கியதும் மயங்கி விழுந்த டிரம்ப் மருமகள் - விஷக்கிருமியா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூத்த மகனின் மனைவி வெனிசாவுக்கு திடீரென உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வந்த பார்சலில் ஆந்த்ராக்ஸ் பவுடரா? என அதிகாரிகள் விசாரணை. 

அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பின் மூத்த மகன் டெனால்டு ஜூனியர். இவரது மனைவி வெனிசா. இவர்கள் மன்ஹாட்டன் நகரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று வெனிசா வீட்டிற்கு தபால் ஒன்று வந்தது. அந்த தபால் உறையை பிரித்து பார்த்ததும் திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். தபால் உறையை பார்த்த அவரது தாயார் மற்றும் வீட்டு வேலையாளர் என அடுத்தடுத்து பாதிக்கப்பட்டனர். 

உடனடியாக அங்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, வெனிசா மற்றும் அவரது உறவினர்களை நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர்கள் நன்றாக உள்ளனர் என டொனால்ட் டிரம்ப் மகன் தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தபால் உறையில் வந்தது ஆந்த்ராக்ஸ் எனப்படும் கொடிய விஷக்கிருமியை பரப்பும் பவுடர் தடவப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைக்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post