காணாமலாக்கப்பட்டோரை தேடி வீதிக்கு வந்து ஓராண்டு நிறைவு - Yarl Voice காணாமலாக்கப்பட்டோரை தேடி வீதிக்கு வந்து ஓராண்டு நிறைவு - Yarl Voice

காணாமலாக்கப்பட்டோரை தேடி வீதிக்கு வந்து ஓராண்டு நிறைவு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்டுவரும் போராட்டம் இன்று ஒரு வருடத்தை எட்டியுள்ளது.

கடந்த வருடம் பெப்ரவலி மாதம் 20 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏ-9 வீதியிலுள்ள கந்தசாமி ஆலய முன்றலில் போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஏனை மாவட்டங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி தொடர்ச்சியான போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.
புலனம்பெயர் அமைப்புக்கள்ரூபவ் தமிழ் அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள்ரூபவ் மனித உரிமை அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலதரப்பட்டவர்களின் ஆதரவுடன் இப் போராட்டங்கள் இரவு, பகலாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவந்தது.

இருப்பினும் போராட்டத்தில் ரூடவ்டுபட்டுள்ளவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் இதுவரையும் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

,தனால் அவர்கள் தமது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முதலில் ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி போராட்டம் இன்றுடன் ஒரு வருடத்தை கடந்துள்ளது.

இதனை நினைவுபடுத்திரூபவ் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும்ரூபவ் சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துக் காட்டும் வகையிலும் அடையாள போராட்டம் ஒன்றினை
நடத்தவுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post