-ஆட்சி அமைக்க கூட்டிணைவு- கட்சிகளுக்கு இடையில் பேச்சுக்கள் ஆரம்பம் - Yarl Voice -ஆட்சி அமைக்க கூட்டிணைவு- கட்சிகளுக்கு இடையில் பேச்சுக்கள் ஆரம்பம் - Yarl Voice

-ஆட்சி அமைக்க கூட்டிணைவு- கட்சிகளுக்கு இடையில் பேச்சுக்கள் ஆரம்பம்

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்ட கட்சிகள் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் எனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக யாழ்.மாநகர சையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினல் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்று அறிய முடிகின்றது.

இப் பேச்சுவார்த்தைகளின் போது சபையின் தலமைத்துவத்தை இரண்டு வருடங்களாக பிரித்து இரு கட்சிகளின் உறுப்பினர்களும் பதவி வகிப்பது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றது.
இப் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுடனும் அந்தந்த கட்சிகள் அவசர கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post