மஹிந்தவின் வெற்றி அரசுக்குப் பாதிப்பில்லை -இரா.சம்பந்தன்- - Yarl Voice மஹிந்தவின் வெற்றி அரசுக்குப் பாதிப்பில்லை -இரா.சம்பந்தன்- - Yarl Voice

மஹிந்தவின் வெற்றி அரசுக்குப் பாதிப்பில்லை -இரா.சம்பந்தன்-

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி, தற்போது ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கத்தை பாதிக்காது என எதிர்க்கட்சி தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் இன்று தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும், கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

மேலும், எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, முன்னாள் மாகாணசபை உருப்பினர்கள், பிரதேசசபை தேர்தலில் போட்டியிட்டவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post