ஊஞ்சலில் மாட்டி சிறுமி பரிதாப பலி - Yarl Voice ஊஞ்சலில் மாட்டி சிறுமி பரிதாப பலி - Yarl Voice

ஊஞ்சலில் மாட்டி சிறுமி பரிதாப பலி

ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் கழுத்துப்
பகுதியில் ஊஞ்சலின் கயிறு இறுக்கியதில் சிறுமி
பரிதாபமாகப் பலியானார்.

இச் சம்பவம் நேற்று காலை பால்பண்ணை வீதி
திருநெல்வேலியில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்வத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிவநேசன்
அக்சாயினி (வயது-9) என்ற சிறுமியே பலியானார்.

குறித்த சிறுமி ஊஞ்சலில் ,ருந்து கொண்டு ஊஞ்சல்
கயிற்றை சுற்றி விளையாடியுள்ளார்.

இதன்போது ஊஞ்சல் கயிறு சிறுமியின் கழுத்தை பலமாக
அழுத்தியதால் சிறுமிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு
வரப்பட்ட போதும் சிறுமி சிகிச்சை பலனின்றி
மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post