மாவீரர் நாள் நினைவேந்தலை யாரும் தடுக்க முடியாது, அச்சமின்றி நினைவுகூர சிவாஜிலிங்கம் அழைப்பு - Yarl Voice மாவீரர் நாள் நினைவேந்தலை யாரும் தடுக்க முடியாது, அச்சமின்றி நினைவுகூர சிவாஜிலிங்கம் அழைப்பு - Yarl Voice

மாவீரர் நாள் நினைவேந்தலை யாரும் தடுக்க முடியாது, அச்சமின்றி நினைவுகூர சிவாஜிலிங்கம் அழைப்பு


தமிழீழ மாவீரர் நாள் நினைவேந்தலை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூர வேண்டும் என கூறியிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், நினைவுகூருவதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.

ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச பதவியேற்றதன் பின்னர் மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பாக மக்கள் மத்தியில் ஒரு பதற்றமான நிலை உருவாகியிருக்கின்றது. ஆனால் அவ்வாறான ஒரு பதற்றம் தேவையற்றதாகும்.

உலகில் எங்கும் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு தடைவிதிக்க முடியாது என்பதுடன் அது உலகில் பல நாடுகளில் ஒரு வழக்கமாக உள்ளது. இந்நிலையில் விடுதலை போரில் உயிரிழந்த எம் உறவுகளை நினைவுகூருவதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது.

தென்னிலங்கையில் ஜே.வி.பி புரட்சிகளில் உயிரிழந்தவர்களுக்கு கார்த்திகை வீரர்கள் தினம் என்ற ஒரு நாளில் நினைவுகூரல் நடாத்த அனுமதிக்கப்பட்டிருக்கும் இலங்கையில் தமிழர்கள் எங்களுடைய மாவீரர்களை நினைவுகூருவதில் என்ன தவறு?

எனவே எந்தவொரு தடைவிதிக்கப்படாலும் மாவீரர்களை நினைவுகூருவதிலிருந்து மக்கள் தவறக்கூடாது. வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் மாவீரர்களுக்கான நினைவேந்தலை நடாத்த பொலிஸார் சில தடைகளை விதிக்கின்றனர் ஆனால் அமைதியாக மாவீரர் நாள் நினைவேந்தல் நடக்கும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post