பார்வையாளர்களால் இனவாதமான தாம் வர்ணிக்கப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர் வெளியிட்ட தகவல் கிரிக்கெட் இரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணிக்கும்இ நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இதனிடையே முதலாவது டெஸ்ட் போட்டி பேய் ஓவலில் இடம்பெற்ற நிலையில்இ அதில் நியூஸிலாந்து அணி 65 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
போட்டியின் இடையே பார்வையாளர் ஒருவர் தன்னை இனவாத ரீதியில் வர்ணித்துப் பேசியதாக இங்கிலாந்து அணி வீரர் ஜொப்ரா ஆர்ச்சர் தெரிவித்திருக்கின்றார்.
இந்த இனவாதப் பேச்சு காரணமாக முதல் டெஸ்ட் போட்டியின் இறுதிநாளில் சரியாக போட்டியில் கவனம் செலுத்தமுடியாமற் போனதாகவும் ஆர்ச்சர் கூறியுள்ளார்.
ஜொப்ரா ஆர்ச்சரின் இந்தக் கருத்தை அடுத்து சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்துவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய விடயத்தை கவனத்திற்கொண்ட நியூஸிலாந்து கிரிக்கெட் சபைஇ மைதானத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராக்களின் உதவியுடன் சம்பந்தப்பட்ட நபரை அடையாளங் கண்டுகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment