இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஐனநாயகத்திற்கு வலிமை - பிரதமர் மோடி - Yarl Voice இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஐனநாயகத்திற்கு வலிமை - பிரதமர் மோடி - Yarl Voice

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஐனநாயகத்திற்கு வலிமை - பிரதமர் மோடி


இந்திய அரசியலமைப்பு கடந்த 70 ஆண்டுகளில் ஜனநாயகத்திற்கு வலிமையூட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட தினமான இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தில் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்த தெரிவித்த அவர்இ 'நமது நாட்டின் மிகவும் உயரிய அரசியலமைப்பு சட்ட தினத்தை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இதே நாளில்தான் மும்பை பயங்கரவாத தாக்குதலும் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியர்களின் கண்ணியம் மற்றும் இந்தியாவின் ஒருமைப்பாடு ஆகியவை நமது அரசியலமைப்பு சட்டத்தின் இருபெரும் தாரகமந்திரங்கள் ஆகும். கடந்த 70 ஆண்டுகளில் ஜனநாயகத்துக்கு இந்தியா அதிகாரம் அளித்து வலிமையூட்டியுள்ளதை நான் நினைவுகூர்கிறேன்.

நமது கடமைகளை நிறைவேற்றாமல் நமது உரிமைகளை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியாது. சாலைவிதிகளை கடைபிடிப்பதும்கூட குடிமக்களாக நமது கடமைகளை நாம் நிறைவேற்றுவதற்கான எடுத்துக்காட்டு ஆகும்' எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டின் அரசியலமைப்பு சட்டம் 26-11-1949 அன்று உருவாக்கப்பட்டது. பல்வேறு மாகாணங்கள் மற்றும் மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியா முழுவதும் 26-1-1950 அன்று முதல்  அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது

0/Post a Comment/Comments

Previous Post Next Post