மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படாது - அமித்ஷா
நாடு முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேடு செயற்படுத்தப்படும் என்றும் மதத்தின் அடிப்படையில் யாரும் பாகுபாடு காட்டி நடத்தப்படமாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியாகத் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கேள்வி நேரத்தின் போது தேசிய குடியுரிமை பதிவேடு தொடர்பாக எழுந்த துணைக் கேள்விக்கு பதில் அளித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
பாகிஸ்தான்இ பங்களாதேஷ்இ ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் மக்கள் அனைவரையும் அகதிகளாக மத்திய அரசு ஏற்கும் என்றும் அவர்களுக்குக் குடியுரிமையும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தேசிய குடியுரிமை பதிவேடு முறை நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் எவரும் அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்த அமைச்சர் அனைவரையும் தேசிய குடியுரிமையின் கீழ் கொண்டு வருவது சாதாரண செயல்முறைதான் என கூறினார்.

Post a Comment