ஆசை வார்த்தை கூறி சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் - இளைஞன் தலைமறைவு - விடுதி உரிமையாளர் கைது - Yarl Voice ஆசை வார்த்தை கூறி சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் - இளைஞன் தலைமறைவு - விடுதி உரிமையாளர் கைது - Yarl Voice

ஆசை வார்த்தை கூறி சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் - இளைஞன் தலைமறைவு - விடுதி உரிமையாளர் கைதுயாழ்ப்பாணத்தில் 16 வயதுடைய இளம் யுவதியை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்த உதவி செய்தனர் என்ற குற்றச் சாட்டில் யாழ் நகரில் அமைந்துள்ள விடுதி உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றுபவர் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் 16 வயதுடைய இளம் யுவதி பேருந்துக்காக நேற்றுமுன்தினம்(19) காத்திருந்துள்ளார்.அப்போது அங்கு வந்த இளைஞன் ஒருவர் அவருடன் காதல் வார்த்தைகள் பேசி யாழ் நகரில் அமைந்துள்ள பிரபல விடுதி ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் விடுதியிலேயே குறித்த இளம் யுவதியை விட்டுவிட்டு அந்த இளைஞன் அங்கிருந்து சென்றுள்ளார்.

இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட யுவதி யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் உள்ள மகளீர் பிரிவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.குறித்த முறைப்பாட்டில் தன்னை ஆசை வார்த்தைகள் கூறி விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்ற இளைஞன் தம்மை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை அடுத்து இளம் யுவதி வழங்கிய தகவலுக்கு அமைய யாழ் நகரில் இயங்கி வரும் பிரபல விடுதியின் உரிமையாளரும் அங்கு பணியாற்றும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இளம் யுவதியை துஸ்பிரயோகம் செய்ய உதவி செய்த்தனர் என்ற குற்றச் ஷாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.என்று பொலிஸார் தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post