புதிய கட்சியை ஆரம்பிக்கிறார் சிறிக்காந்தா? - Yarl Voice புதிய கட்சியை ஆரம்பிக்கிறார் சிறிக்காந்தா? - Yarl Voice

புதிய கட்சியை ஆரம்பிக்கிறார் சிறிக்காந்தா?


தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறிக்காந்தா தலைமையில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.

மேற்படி கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்த சிறிகாந்தா கடந்த ஐனாதிபதி தேர்தலின் போது கட்சியின் தீர்மானத்தை மீறி செயற்பட்டதால் அவரை கட்சியில் இருந்து இடைநிறுத்துவதற்கு கட்சி தீர்மானித்துள்ளது.

இதனையடுத்து நேற்று தனது ஆதரவாளர்களையும் தன்னுடன் இருக்கின்ற கட்சிப் பிரமுகர்களையும் சந்தித்துக் கலந்துரையாடிய போதே புதிய கட்சியொன்றை ஆரம்பிப்து குறித்து பேசியிருக்கின்றார்.

குறிப்பாக கடந்த ஐனாதிபதி தேர்தலில் புதிய ஐனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதென கட்சி தீர்மானத்தை எடுத்திருந்தது. 
இந்நிலையில் அக் கட்சியின் இன்னொரு உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

இதனையடுத்து உடனடியாக சிவாஜிலிங்கத்தை கட்சியிலிருந்து இடைநிறுத்துவதாக கட்சித் தலைமை அறிவித்தது. 
இந்நிலையில் தேர்தலின் போது சிவாஐpலிங்கத்திற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் கட்சியின் செயலாளரும் ஏனைய சிலரும் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் அவசரமாக கூடிய ரெலோவின் தலைமைக்குழு கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக சிவாஐpலிங்கத்திற்கு நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில் கட்சியின் செயலாளர் நாயகமும் அவருடன் சில உறுப்பினர்களும் கட்சி கட்டுப்பாட்டை மீறியிருப்பதால் அவர்களையும் உடனடியாக கட்சியிலிருந்த இடைநிறுத்தவதாக அறிவித்தது.

ஏற்கனவே கட்சியின் செயற்பாடுகளில் கடும் அதிருப்தி வெளியிட்டு வந்த செயலாளர் நாயகம் சிறிகாந்தா கட்சி தன்னை தற்போது இடைநிறுத்தியுள்ளதால் ஏனைய உறுப்பினர்களையும் தனது ஆதரவாளர்களையும் இணைத்துக் கொண்டு புதிய கட்சியொன்றை ஆரம்பிப்தற்கு உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post