தங்களை தாமே நிர்வகிக்கும் சுயாட்சி பிராந்தியத்தை உருவாக்க வாக்களித்த எதியோப்பியாவின் சிடாமா மக்கள் - Yarl Voice தங்களை தாமே நிர்வகிக்கும் சுயாட்சி பிராந்தியத்தை உருவாக்க வாக்களித்த எதியோப்பியாவின் சிடாமா மக்கள் - Yarl Voice

தங்களை தாமே நிர்வகிக்கும் சுயாட்சி பிராந்தியத்தை உருவாக்க வாக்களித்த எதியோப்பியாவின் சிடாமா மக்கள்


தம்மைத் தாமே நிர்வகிக்கும் தங்களது பிராந்தியத்தை உருவாக்க எதியோப்பியாவின் சிடாமா மக்கள் வாக்களித்துள்ளனர்.

எதியோப்பியாவின் பிரதமர் அபி அஹ்மட் தலைமையிலான சீர்திருத்தங்களின் கீழ் எதியோப்பியாவின் பல இனக் குழுமங்கள் மேம்பட்ட சுயாட்சியை வலியுறுத்துகின்ற நிலையிலேயே தம்மைத் தாமே நிர்வகிக்கும் தங்களது பிராந்தியத்தை உருவாக்க சிடாமா மக்கள் வாக்களித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் 98.5 சதவீதமான மக்கள் தம்மைத் தாமே நிர்வகிக்கும் தங்களது பிராந்தியத்தை உருவாக்க ஆதரவளித்துள்ளதாக எதியோப்பியாவின் தேர்தல் சபை நேற்று  தெரிவித்துள்ளது. இந்த வாக்கெடுப்பில் 99.7 சதவீதமானோர் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதியோப்பியாவின் 105 மில்லியன் பேரைக் கொண்ட சனத்தொகையில் ஏறத்தாழ நான்கு சதவீதத்தை பிரதிநித்துவப்படுத்தும் சிடாமா தங்களைத் தாங்கே நிர்வகிக்கும் எதியோப்பியாவின் 10ஆவது சுயாட்சி பிராந்தியத்தை உருவாக்க மேற்குறித்த முடிவுகள் வழிவகுத்துள்ளன.

அந்தவகையில் உள்ளூர் வரிகள் கல்வி பாதுகாப்பு குறிப்பிட்ட சட்டமூலங்களை அவர்கள் கட்டுபடுத்த முடியும்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post