சபரிமலை கோயிலுக்கு தனிச் சட்டம் உருவாக்க வேண்டும் - அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு - Yarl Voice சபரிமலை கோயிலுக்கு தனிச் சட்டம் உருவாக்க வேண்டும் - அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு - Yarl Voice

சபரிமலை கோயிலுக்கு தனிச் சட்டம் உருவாக்க வேண்டும் - அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு


சபரிமலை கோயிலுக்கு தனிச் சட்டம் உருவாக்க வேண்டும் என கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்கள் அனுமதி தொடர்பான வழக்கில் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தொடரும் என உத்தரவிட்டது.

இதன் மூலம் இப்போதும் இளம்பெண்கள் கோயிலுக்கு செல்லலாம் என்ற நிலையே நீடிக்கிறது.

ஆனாலும் நீதிமன்ற அனுமதி இல்லாமல் கோயிலுக்கு வரும் 10 முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என கேரள அரசு அறிவித்தது.

இதனால் தரிசனத்திற்கு வரும் பெண்கள் பம்பையிலேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில்இ கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறபித்த உத்தரவில் குருவாயூர் உள்ளிட்ட கோயில்களை போல சபரிமலைக்கு கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் நலனுக்காக தனிச்சட்டத்தை கேரள அரசு உருவாக்க வேண்டும்.

ஜனவரி 3ஆம் வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேரள அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post