முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்குமாறு சபாநாயகரிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரிவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள நிலையிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவளை சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று கோரி 45 எம்பிகள் கையொப்பிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கபீர் ஹாஷிம்இ ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 45 எம்பிகள் குறித்த கடிதத்தில் ஒப்பமிட்டுள்ளனர்.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் கட்சிக்குள் ரணில் மற்றும் சஜித் அணியினர் முரண்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது
Post a Comment