தமிழ் மக்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண வேண்டும் - புதிய ஐனாதிபதியிடம் இந்தியா வலியுறுத்து - Yarl Voice தமிழ் மக்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண வேண்டும் - புதிய ஐனாதிபதியிடம் இந்தியா வலியுறுத்து - Yarl Voice

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண வேண்டும் - புதிய ஐனாதிபதியிடம் இந்தியா வலியுறுத்து


தமிழ் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படுவதை உறுதிப்படுத்துமாறு இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் செய்தியாளர்களிடம் இதனை கூறியுள்ளார்.

கொழும்புக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர்இ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்தியாவின் இந்த விருப்பத்தை தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் சமத்துவத்துடனும் நீதியுடனும் சமாதானமாகவும் கண்ணியமாகவும் வாழக் கூடியதாக அவர்களது அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வொன்றை காண்பதற்கான தேசிய நல்லிணக்க செயன்முறைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை இலங்கை ஜனாதிபதியிடம் ஜெய்ஷங்கர் பேச்சுவார்த்தையின் போது தெரியப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

மேலும்இ இனத்துவ அடையாள பாகுபாடு இன்றி சகல இலங்கையர்களுக்குமான ஜனாதிபதியாக தான் இருப்பேன் என கோட்டாபய ராஜபக்ஷ ஜெய்ஷங்கரிடம் கூறியதாகக் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் பணியாற்றுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் பேச்சாளர் கூறினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post