தேர்தலைக் கண்டு ஸ்ராலினுக்கு அச்சம் - முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு - Yarl Voice தேர்தலைக் கண்டு ஸ்ராலினுக்கு அச்சம் - முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு - Yarl Voice

தேர்தலைக் கண்டு ஸ்ராலினுக்கு அச்சம் - முதல்வர் எடப்பாடி குற்றச்சாட்டு


உள்ளூராட்சித் தேர்தலை கண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அச்சப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 37ஆவது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அரசு உயரதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிஇ அரசின் பல்வேறு திட்டங்களுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுவதாக கூறினார்.
மேலும் உள்ளூராட்சித் தேர்தலை தள்ளிப்போடவே தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து 6 பேர் உள்ளூராட்சித் தேர்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
புதிய மாவட்டங்களில் தொகுதி வரையறை செய்யாமல் தேர்தலை நடத்தினால் நாங்கள் பாதிக்கப்படுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post