பல்கலைகழகத்திற்குள் மாணவர்கள் நுழைய தடை, மாவீரர்நாள் நினைவேந்தலை தடுக்க அடுத்த அறிவிப்பை விடுத்த பல்கலைக்கழக நிர்வாகம் - Yarl Voice பல்கலைகழகத்திற்குள் மாணவர்கள் நுழைய தடை, மாவீரர்நாள் நினைவேந்தலை தடுக்க அடுத்த அறிவிப்பை விடுத்த பல்கலைக்கழக நிர்வாகம் - Yarl Voice

பல்கலைகழகத்திற்குள் மாணவர்கள் நுழைய தடை, மாவீரர்நாள் நினைவேந்தலை தடுக்க அடுத்த அறிவிப்பை விடுத்த பல்கலைக்கழக நிர்வாகம்யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்திற்குள் சகல பீட மாணவர்களும் 27 மற்றும் 28ம் திகதிகளில் உட்பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதான இரண்டாம் அறுவித்தல் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை பல்கலைக்கழகத்திற்குள் வருடா வருடம் நடாத்தி வருவது போன்று இம்முறையும் நடாத்துவதற்கு பல்கலைகலைக் கழக மாணவர்கள் நடவடிக்கை எடுத்திரந்தனர்.

இந்நிலையில் பல்கலைக்கழகத்திற்குள் மாவீரர் நாள் நினைவேந்தலை நடாத்த முடியாதென பல்கலைக்கழக நிர்வாக அறிவித்தல் விடுத்திருந்தது.

ஆயினும் நிகழ்வை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்துள்ளதால் திட்டமிட்டபடி நிகழ்வை நடாத்துவதற்கு மாணவர்கள் தீர்மானித்திருந்தனர்.

இதனையடுத்து எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் அதாவது மாவீரர் தின நிகழ்வை நடாத்த முடியாதவாறு மாணவர்கள் எவரும் பல்கலைக்கழகத்திற்குள் உட்பிரவேசிக்க தடை எனறும் எந்தவொரு நிகழ்வையும் நடாத்த முடியாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அடுத்த அறிவிப்பை விடுத்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post