மாவீரர் நாளை மதிப்போடும் மரியாதையோடும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க வேண்டும் - சுமந்திரன்
மாவீரர் நாளை மதிப்போடும் மரியாதையோடும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போது மாவீரர் தினம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவித்ததாவது...
மாவீரர் தினம் சம்மந்தமாக ஏற்கனவே ஒரு செய்தி வந்திருந்தது. கடந்த 19 ஆம் திகதி முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவை தனியாக நான் சந்தித்து உரையாடியிருந்தேன். அதன் போது இந்த விடயத்தைப் பற்றி நான் அவரோடு பேசியிருந்தேன்.
அதாவது எவரையும் நினைவு கூருவதற்கு உரிமை இருக்க வேண்டும் என்பதை நான் வலியுறுத்திச் சொல்லியிருந்தேன். இது எங்கள் மக்களுடைய உணர்வுபூர்வமான ஒரு விடயம். இதைத் தடுக்க முற்படக் கூடாது என்று நான் சொல்லியிருந்தேன்.
அதற்குச் சாதகமான ஒரு பதிலைத் தான் அவர் எனக்குச் சொல்லியிருந்தார். அதாவது இதை தான் ஐனாதிபதிக்கு அறியத் தருகிறறேன் என்று சொல்லியிருந்தார்.
ஆகையினாலே எங்களுடைய எதிர்பார்ப்பு இந்த விடயத்திலே அரசாங்கம் விசNடமாக பாதுகாப்புத் தரப்பு தலையிடாமல் இருக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
அதற்காக அவர் எனக்கு வாக்குறுதி கொடுத்தார் என்று சொல்ல நான் விரும்பவில்லை. ஆனாலும் நான் சொன்னதை அவர் ஏற்றுக் கொண்டிருந்தார்.
நாங்களும் இந்த நிகழ்வை அந்த நிகழ்விற்குரிய மரியாதையோடும் மதிப்போடும் அனுஷ்டிப்பது நல்லது. இந்த நிகழ்வை ஒரு சண்டைக்களமாக மாற்றுகிற போக்கிலெ நாங்களும் போகாமல் இருப்பது நல்லது. அது இறந்தவர்களுக்கு செய்கிற அவமரியாதையாகக் கூட இருக்கலாம்
.
ஆனபடியினாலே பக்குவமாக அதே நேரம் கவனமாக எங்களுடைய உரித்தை நாங்கள் விட்டுக் கொடுக்காமல் உணர்வுபுர்வமாக அந்தத் தினத்தை அனுஷ்டிக்க வேண்டும். அதிலே எந்தவிதமான மாறுபாடான கருத்தக்கும் இடமில்லை.

Post a Comment