சோமாலியா குண்டு வெடிப்பில் 70 இற்கும் மேற்பட்டோர் பலி
சோமாலியா தலைநகரில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 50இற்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாகவும் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடுமென அஞ்சுவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்ட வேளையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே உயிரிழப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment