தமிழ்க் கட்சிகள் பிரிந்து நிற்காமல் ஒன்றுபட வேண்டுமென நல்லை ஆதீன முதல்வர் வலியுறுத்து - Yarl Voice தமிழ்க் கட்சிகள் பிரிந்து நிற்காமல் ஒன்றுபட வேண்டுமென நல்லை ஆதீன முதல்வர் வலியுறுத்து - Yarl Voice

தமிழ்க் கட்சிகள் பிரிந்து நிற்காமல் ஒன்றுபட வேண்டுமென நல்லை ஆதீன முதல்வர் வலியுறுத்து


தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டுமென நல்லை அதீனக் குரு முதல்வர் சோமசுந்தர ஞானதேசிக பரமசாரிய சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் கு.சுரேந்திரன், இளைஞரிணிச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் ஆகியோர் இன்று நல்லை ஆதீன முதல்வரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.

மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இச் சந்திப்பில் சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் என்பன தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் போது தமிழ் மக்களின் விடயத்தில் எல்லோரும் குறிப்பாக அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக ஒத்த கருத்துடன் ஒன்றுபட வேண்டும் என்றும் ஆதீனக் குரு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

ஆத்தகைய ஒற்றுமைய குறித்து தானும் சிலருடன் பேசியிருப்பதாகவும் தொடர்ந்தும் அந்த ஒற்றுமைக்காக பலருடனும் பேச இருப்பதாகவும் குறிப்பிட்ட குருமுதல்வர் இன்றைய காலத்தில் தமிழ்த் தரப்புக்கள் பிரிந்து நிற்காமல் ஒன்றாக ஒருமித்து பயணிக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளார்.

மேலும் மக்களின் அபிவிருத்தி, வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மக்களின் அபிலாசைகளை வென்றnடுப்பதற்கு அவ்வாறான ஒற்றுமையின் அடிப்படை வேண்டுமென்ற நிலைப்பாட்டையும் அதற்காக தாமும் தம்மாளான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் ரெலோ அமைப்பின் பிரதிநிதிகளும் இதன் போது குரு முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post