புதிய ஆண்டிற்குள் அனைத்து வாள்வெட்டுக் குழுக்களையும் அடக்குவோம் - பொலிஸார் அறிவிப்பு - Yarl Voice புதிய ஆண்டிற்குள் அனைத்து வாள்வெட்டுக் குழுக்களையும் அடக்குவோம் - பொலிஸார் அறிவிப்பு - Yarl Voice

புதிய ஆண்டிற்குள் அனைத்து வாள்வெட்டுக் குழுக்களையும் அடக்குவோம் - பொலிஸார் அறிவிப்பு


யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் செயற்படுகின்றன. அவற்றை அடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம்.புதிய ஆண்டிற்குள் அவர்கள் அனைவரையும் எம்மால் ஒழிக்க முடியும் . அதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட் சிரேஷட பொலிஸ் அத்தியாட்ச்கர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று மாவட்ட் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழ்ப்பாணத்தில் இளம் வயதுடைய இளைஞர்களே வாள்வெட்டில் ஈடுபடுகின்றனர்.அவ்வாறு ஈடுபடும் 6 வாள்வெட்டுக் குழுக்கள் எம்மால் அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த குழுக்களில் உள்ளவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன.

யாழில் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனுடன் தொடர்புடைய பலர் கைதுசெ எய்யப்பட்டுள்ளனர்.எஞ்சியுள்ள  சிலரை கைது செய்ய வேண்டிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

குறிப்பாக வாள்வெட்டில் ஈடுபடுபவர்கள் இரண்டுவிதமான வகையில் செயற்படுகின்றனர்.ஒரு குழு பழிவாங்கும் நோக்குடன் இன்னொரு குழுக்களுடன் மோதலில் ஈடுபடுகின்றது. மற்றையது போதைப் பொருள் வியாபாரிகளின் கீழ் செயற்படுகின்றது. இந்த குழுக்களை நாம் புத்தான்டுக்கு முன்னர் ஒழித்துவிடுவோம்.அதற்கான விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post