பாதாள உலகக் கும்பலையும் போதைப் பொருளையும் இல்லாதொழிப்போம் - பாதுகாப்பு செயலாளர் - Yarl Voice பாதாள உலகக் கும்பலையும் போதைப் பொருளையும் இல்லாதொழிப்போம் - பாதுகாப்பு செயலாளர் - Yarl Voice

பாதாள உலகக் கும்பலையும் போதைப் பொருளையும் இல்லாதொழிப்போம் - பாதுகாப்பு செயலாளர்


பாதாள உலக கும்பல் மற்றும் போதைப் பொருளை முற்றாக ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

வெயாங்கொடவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்

' இந்த அரசாங்கத்திற்கு எவரையும் பழிவாங்குவதற்கு அவசியம் கிடையாது. பாதுகாப்பு செயலாளராக பணியாற்றும் பொழுது முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் முன்மாதிரியான நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டு செயற்படுகிறேன்.

நாட்டு மக்களுக்கு பெரும் தலையிடியாக அமைந்துள்ள பாதாள உலக கும்பல் மற்றும் போதைப் பொருளை இல்லாதொழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.' என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post