குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு - Yarl Voice குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு - Yarl Voice

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு


மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் சட்டத்திற்கு புறம்பானது என உத்தரவிடக்கோரி காங்கிரஸ் திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சி மக்கள் நீதி மய்யம் இஸ்லாமிய அமைப்புகள் என மொத்தம் 59 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குடியுரிமை திருத்தச் சட்டம் ஏன் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து விரிவான விளக்கங்களை அளியுங்கள் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்த விரிவான அறிக்கையை ஜனவரி 22-ஆம் திகதிக்குள் அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்த விசாரணையை முழுமையாக முடிக்கும் வரை இந்த சட்டத்தை வைத்து மத்திய அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என எதிர்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. எனினும் அதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post