விமானம் தாங்கி கப்பலை களமறிக்கிய - சீனா - Yarl Voice விமானம் தாங்கி கப்பலை களமறிக்கிய - சீனா - Yarl Voice

விமானம் தாங்கி கப்பலை களமறிக்கிய - சீனா

உலகத் தரம் வாய்ந்த கடற்படையை களமிறக்க வேண்டும் என்ற சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் அபிலாஷைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகஇ சீனா தனது உள்நாட்டில் உருவாக்கிய முதல் விமானம் தாங்கி கப்பலை களமிறக்கியுள்ளது.

தெற்கு மாகாணமான ஹைனனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த நிகழ்வில் 'ஷான்டோங்' என்ற அதீநவின விமானம் தாங்கி கப்பல் அதிகாரப்பூர்வமாக மக்கள் விடுதலை கடற்படையுடன் சேவையில் இணைந்தது.

இதன்போது சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் சீனக் கொடி மற்றும் கப்பலின் அதிகாரப்பூர்வ பெயருடன் ஒரு சான்றிதழை கப்பலின் கேப்டன் மற்றும் அரசியல் ஆணையருக்கு வழங்கினார்.

சீனக் கடற்படையில் இணைந்த இரண்டாவது விமானம் தாங்கி கப்பல் இதுவாகும். சீனாவின் முதல் விமானம் தாங்கி கப்பலான லியோனிங் 1998ஆம் ஆண்டு உக்ரேனிய அரசாங்கத்திடமிருந்து வாங்கப்பட்டது.

அமெரிக்க கடற்படையின் விருப்பமான 'கவண்' தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும்போது லியோனிங் மற்றும் ஷாண்டோங் இரண்டும் விமானங்களைத் தொடங்க விமான டெக்கின் முடிவில் ஸ்கை-ஜம்ப் ஸ்டைல் வளைவுகளைப் பயன்படுத்துகின்றன.


0/Post a Comment/Comments

Previous Post Next Post