தேர்தல் ஆசனங்கள் தொடர்பாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழில் ஆராய்வு - Yarl Voice தேர்தல் ஆசனங்கள் தொடர்பாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழில் ஆராய்வு - Yarl Voice

தேர்தல் ஆசனங்கள் தொடர்பாக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யாழில் ஆராய்வு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  விசேட கூட்டம் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணலுள்ள  இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைமை செயலகத்தில் குறித்த கூட்டம் இடம்பெற்று வருகின்றது.

கடந்த 17ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தொடர்ச்சியாகவே இன்றைய கூட்டம் இடம்பெற்று வருகிறது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பங்காளி கட்சிகளுக்கான ஆசன பங்கீடுகள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்வதற்காக குறித்து கூட்டம் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாஇ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்களநாதன்இ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்இ உள்ளிட்ட சில முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post