கொழும்பு, ஹம்பகாவிலும் போட்டியிட தயாராகிறது கூட்டமைப்பு - சம்மந்தனுடன் பேசி விரைவில் இறுதி முடிவு என்கிறார் மாவை எம்பி - Yarl Voice கொழும்பு, ஹம்பகாவிலும் போட்டியிட தயாராகிறது கூட்டமைப்பு - சம்மந்தனுடன் பேசி விரைவில் இறுதி முடிவு என்கிறார் மாவை எம்பி - Yarl Voice

கொழும்பு, ஹம்பகாவிலும் போட்டியிட தயாராகிறது கூட்டமைப்பு - சம்மந்தனுடன் பேசி விரைவில் இறுதி முடிவு என்கிறார் மாவை எம்பி


எதிர்வரும் தேர்தலில் வடக்கு கிழக்கு மாணத்திற்கு வெளியிலும் போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரீசீலித்துள்ளதாகவும் எந்தெந்த மாவட்டங்களில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இன்னும் சில தினங்களில் உத்தியோபூர்வமாக இறுதி முடிவை அறிவிக்க உள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தள்ளார்.

தமிழ்த் தேசியக் கூடு;டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான கூட்டமொன்று யாழ் மார்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. இக் கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மாவை சேனாதிராசா மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்..

வடக்கு கிழக்கில் போட்டியிடுவதற்கான ஆசனப்பங்கீடுகள் தொடர்பில் பேசியிருக்கின்றோம். அதே நேரத்தில் வடக்கு கிழக்கிற்கு வெளியிலும் எதிர்கால தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாகவே பெரும்பாலும் பேசியிருக்கின்றோம். அதே நேரத்தில் வடக்கு கிழக்கிற்கு வெளியெ போட்டியிடுவதது பற்றி அனேகமாக அடுத்தவாரம் பாராளுமன்றம் கூடியதன் பின்னர் இறுதி முடிவை அறிவிப்போம்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் நாங்கள் போட்டியிடுவது மற்றும் அதற்கான ஆசனங்கள் மற்றும் வேட்பாளர் தொடர்பில் எடுத்த தீர்மானங்களை சம்மந்தன் அவர்களுடன் பேசி இறுதி செய்வதற்கும் அதே நேரத்தில் வடக்கு கிழக்கிற்கு வெளியில் நாங்கள் போட்டியிடுவது பற்றியும் கொழும்பில் நடக்கின்ற கூட்டத்தில் இறுதி முடிவை எடுப்பது என்று இன்றைய கூட்டத்தில் நாங்கள் தீர்மானித்திருக்கின்றொம்.

இதே வேளை வுடக்கு கிழக்கில் போட்டியிடுவது என்றால் எந்தெந்த மாவட்டங்கள் என்பது பற்றியும் அடுத்த கூட்டத்தில் தான் தீர்மானிப்போம். அதிலும் கொழும:பு மற்றும் கம்பகா மாவட்டங்களில் போட்டியிடுவது தொடர்பில் நாங்கள் பேசினோம். அதனைவிட தமிழரசுக் கட்சியின் ஆரம்ப காலங்களில் நாங்கள் புத்தளம் சிலாபம் போன்ற இடங்களில் கூட நாங்கள் போட்டியிட்டிருக்கின்றொம்.

ஆனபடியால் அவற்றைப் பற்றி அங்குள்ள அதாவது கொழும்பில் இருக்கின்ற கூட்டமைப்பின் அல்லது தமிழரசுக் கட்சியின் கிளை அமைப்புக்களுடன் பேசி எங்கெங்கு வாய்ப்பான இடங்கள் இருக்கின்றன அதாவது எங்கெங்கு வாக்குகளை அதிகமாகப் பெற முடியும் எனப் பார்த்து அடுத்து கூட்டத்தில் பேசி முடிவெடுப்போம்.

மேலும் இது சம்மந்தமாக ஏனைய கட்சிகள் குறிப்பாக மலையகக் கட்சிகளோடும் தேவைப்பட்டால் முஸ்லீம் கட்சிகளோடும் பேச்சுவார்த்தை நடாத்தி ஒரு இணக்கத்தின் அடிப்படையில் நாங்கள் அங்கும் போட்டியிடலாம் என்ற ஒரு கருத்தை நாங்கள் ஆராய்ந்திருக்கின்றோம். எல்லாவற்றையும் வருகிற 3 ஆம் திகதி கூடி  ஆராய்ந்த இறுதியாக நாங்கள் இறுதி முடிவிற்கு வருவோம் என்பதையும் கூறிக் கொள்கிறேன் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post