இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும் என்கிறார் விக்கினேஸ்வரன் - Yarl Voice இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும் என்கிறார் விக்கினேஸ்வரன் - Yarl Voice

இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும் என்கிறார் விக்கினேஸ்வரன்


இந்தியாவில் வசித்து வருகின்ற ஈழத் தமிழர்கள் நாடு திரும்ப வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாக உள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அகதிகளாக வசிக்கின்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான சட்டமூலம் நேற்று இந்திய மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என்று வெளியுறவுத் துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து வெளியிடும்போதே விக்னேஸ்வரன் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வசிக்கின்ற ஈழஅகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாதுள்ளமை ஒரு பாதிப்பான விடயமாக கருத முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வடக்கு கிழக்கு மக்களுக்கான தீர்வினை விரைவிலேயே பெற்றுக்கொடுக்க இந்தியா உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post