யுத்த குற்றவாளிகளே அரசாங்கமாக வந்துள்ளதால் நீதியை எதிர்பார்க்க முடியாது சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டும், விசேட தீர்ப்பாயம் உருவாக்க வேண்டும் - கஜேந்திரன் - Yarl Voice யுத்த குற்றவாளிகளே அரசாங்கமாக வந்துள்ளதால் நீதியை எதிர்பார்க்க முடியாது சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டும், விசேட தீர்ப்பாயம் உருவாக்க வேண்டும் - கஜேந்திரன் - Yarl Voice

யுத்த குற்றவாளிகளே அரசாங்கமாக வந்துள்ளதால் நீதியை எதிர்பார்க்க முடியாது சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்ல வேண்டும், விசேட தீர்ப்பாயம் உருவாக்க வேண்டும் - கஜேந்திரன்


சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட யுத்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்கின்றவர்களாகவே இதுவரை காலமும் அரசாங்கத்தினர் இருந்து வந்தனர். ஆனால் இப்பொழுது யுத்தக் குற்றவாளிகளே அரசாங்கமாக வந்திருக்கின்ற நிலைமையில் இவர்களிடமிருந்து எந்தவித நீதியையும் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்க்க முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆகையினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருக்கக் கூடிய அந்த பொறுப்புக் கூறல் விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும். அல்லது இந்த விடயங்கள் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கு விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றை உருவாக்க வேண்டும்.

அதற்கமைய எதிர்காலத்திலாவது சர்வதேச சமூகம் பாராமுகமாக அல்லது பக்கச்சார்பாக இல்லாமல் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கின்ற வகையிலே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கின்ற தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தீயுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கடந்த காலங்களில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ் பிராந்திய மனித உரிமைகள் ஆனைக்குழு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

கடந்த காலங்களில் சிறிலங்கா ஆயுதப்படைகளால் அவர்களோடு இணைந்து இயங்கிய துணை இரானுவக் குழுக்களாலும் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்தத்தின் இறுதியில் இரானுவத்திடம் சரணடைந்து, குடும்பத்தினரால் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுடைய உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடாத்தியிருக்கின்றார்கள்.

யுத்தம் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் இன்று வரைக்கும் சிறிலங்கா அரசாங்கத்தினால் அரசபடைகளினாலும் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக எந்தவிதமான தகவல்களும் வெளிப்படுத்தப்படவில்லை.

இந்தநிலைமையிலே அந்த மக்கள் தொடர்ச்சியாக வீதிகளிலே இருந்து போராடி வருகின்றார்கள். குறிப்பாக ஆயிரம் நாட்களைத் தாண்டியும் கூட வீதிகளில் போராடுகின்ற நிலைமையொன்று தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலைமைக்கு முடிவு வர வேண்டும் என்பதே எமது மக்களுடைய பிரதான கோரிக்கையாக இருக்கின்றது. இவ்வாறான நிலைமையில் காணாமல் போனவர்களுக்கு, போனதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தான் இன்று நாட்டிலே ஆட்சி பீடம் ஏறியிருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து ஒருபோதும் நீதி கிடைக்கப் போவதில்லை.

ஆகவே இனிமேலும் தாமதிக்காமல் சர்வதேச சமூகம் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையொன்று உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருக்கக் கூடிய அந்த பொறுப்புக் கூறல் விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும். அல்லது இந்த விடயங்கள் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கு விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றை உருவாக்க வேண்டும்.

அதனூடாக நீதி தர வேண்டும் என்பதே இந்த மக்;களுடைய பிரதானமான கோரிக்கையாக இருக்கின்றது. ஏனெனில் அதனூடாக மட்டும் தான் நாங்கள் நீதியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.

அதிலும் குறிப்பாக இதுவரை காலமும் யுத்தக் குற்றவாளிகளைப் பாதுகாக்ககின்றவர்களாக இந்த அரசாங்கத்தினர் இருந்தார்கள். இப்பொழுது யுது;தக் குற்றவாளிகளே அரசாங்கமாக வந்திருக்கின்ற நிலைமையில் இவர்களிடமிருந்து எந்த நீதியையும் எதிர்பார்க்க முடியாது.

அத்தோடு இந்த இடத்திலும் வைத்து இரானுவத்தினர் வெளியேற வேண்டுமென்றும், பயங்கரவாதத தiடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கையை இந்த மக்கள் முன்வைத்திருக்கின்றார்கள்.

ஏனெனில் இந்த இரண்டு விடயங்களையும் வைத்துக் கொண்டு தொடர்ந்து தமிழ் மக்கள் கொடுரமான ஒரு அடக்கு முறைக்குள் தடுத்து வைக்கப்படுகின்ற சுதந்திரமற்ற நிலைமை தொடர்ந்தும் பேணப்படுகின்ற நிலைமை நீடித்தக் கொண்டிருக்கிறது.

ஆகவே இரர்னுவத்தினர் வெளியெற்றப்பட வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட்டு தமிழ் மக்கள் மீதான நெருக்கடிகள் நீக்கப்பட வேண்டும். சிறையிலுள்ள அனைத்து அரசியல் கைதிகளும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்கப்பட வேண்டும். காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும். இவை எல்லாவற்றுக்குமாக உடனடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பது இந்த மக்களுடைய கோரிக்கையாக இருக்கிறது.

அந்தக் கோரிக்கைக்காக நாங்களும் கடந்த எட்டு ஆண்டுகளாக nஐனிவா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று சர்வதேச விசாரணையை நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம். எதிர்காலத்திலாவது சர்வதேச சமூகம் பாராமுகமாக பக்கச்சார்பாக இல்லாமல் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கின்ற வகையிலே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்கின்ற தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டுமென்று இந்த சர்வதேச மனித உரிமைகள் தினத்திலே நாங்களும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post