பிடியாணை உத்தரவால் ஓரிரு நாட்களில் ராஜித கைது செய்யப்படலாம் - அதிர்ச்சியில் முன்னைய ஆட்சியாளர்கள் - Yarl Voice பிடியாணை உத்தரவால் ஓரிரு நாட்களில் ராஜித கைது செய்யப்படலாம் - அதிர்ச்சியில் முன்னைய ஆட்சியாளர்கள் - Yarl Voice

பிடியாணை உத்தரவால் ஓரிரு நாட்களில் ராஜித கைது செய்யப்படலாம் - அதிர்ச்சியில் முன்னைய ஆட்சியாளர்கள்


பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன ஒருநாளுக்குள் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் ராஜித சேனாரத்னவை காணவில்லை என்பதனால் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரைத் தேடி விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதவானால் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனவே சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பான விசாரணைகளுக்கமைய அவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் தப்புல டீ லிவேராஇ குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post