வடகொரியாவை மீண்டும் எச்சரித்த அமெரிக்கா - Yarl Voice வடகொரியாவை மீண்டும் எச்சரித்த அமெரிக்கா - Yarl Voice

வடகொரியாவை மீண்டும் எச்சரித்த அமெரிக்கா


வடகொரியாவின் மற்றுமொரு ஏவுகணைச் சோதனையை அடுத்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியா  ஏவுகணை சோதனை ஒன்றை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் கூறும்போது 'வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் விரோதமான வழியில் செயல்பட்டால் அனைத்தையும் இழப்பீர்கள்.

வடகொரிய ஜனாதிபதி கிம் அமெரிக்காவுடனான உறவை ரத்து செய்ய விரும்பமாட்டார் என்று நினைக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா ஜப்பான் தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும்இ அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது.

அதுமுதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது.

இதன் தொடர்ச் சியாகஇ வடகொரிய அதிபர் கிம்இ அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் நடைபெற்றது.

இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் அமெரிக்கா - வடகொரியா இடையே அணு ஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வரும் நிலையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post