காஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குமாறு அமெரிக்கா வலியுறுத்து - Yarl Voice காஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குமாறு அமெரிக்கா வலியுறுத்து - Yarl Voice

காஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குமாறு அமெரிக்கா வலியுறுத்துகாஷ்மீரில் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குமாறு  வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரமிளா ஜெயபால் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பெரும்பாலும் விலக்கிக்கொள்ளப்பட்டு உள்ளன.

எனினும் இணையத் தள சேவை இன்னும் வழங்கப்படாததுடன் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

 இத்தகைய கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இந்திய-அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஜனநாயக கட்சி எம்.பியான பிரமிளாஇ குடியரசு கட்சியை சேர்ந்த ஸ்டீவ் வாட்கின்ஸ் எம்.பி.யுடன் சேர்ந்து இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

காஷ்மீரில் போராடுபவர்களுக்கு எதிராக அதிகப் படைகளை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும்இ அனைத்து மக்களின் மத சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தடுப்புக்காவலில் வைத்திருப்பவர்களை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு போடும் விதிமுறைகளுக்கும் அந்த தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த தீர்மானம் மிகவும் எளிமையானது என்றும் இது செனட் சபைக்கு அனுப்பப்படாது எனவும் எம்.பி.க்கள் கூறியுள்ளனர்.

மேலும் இதன் மீது வாக்கெடுப்பும் நடத்த முடியாது.

முன்னதாக இந்த தீர்மானத்தை தாக்கல் செய்யக்கூடாது எனக்கோரி பிரமிளாவின் வீட்டு முன் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும் இது தொடர்பாக அவருக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட -மெயில்களும் அனுப்பப்பட்டன. எம்.பி. பிரமிளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post