கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சியின் ஆண்டு விழா
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.
இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்டடக்கிளையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் ஆரம்பமானது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா கலந்து கொண்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜா மத தலைவைர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் விருந்தினர்கள் வரவேற்கப்ட்டதை தொடர்ந்து கட்சியின் கொடி ஏற்றப்பட்டுஇ தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த விழாவில் கலை நிகழ்வுகளும் அதிதிகள் உரையும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கதாகும்.

Post a Comment