புதிய அரசின் செயற்பாடுகள் கவலையளிக்கிறது - மாவை சேனாதிராசா - Yarl Voice புதிய அரசின் செயற்பாடுகள் கவலையளிக்கிறது - மாவை சேனாதிராசா - Yarl Voice

புதிய அரசின் செயற்பாடுகள் கவலையளிக்கிறது - மாவை சேனாதிராசா


பௌத்த சிங்கள அரசாக தம்மை காண்பிக்க இந்த அரசு முயல்வதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா புதிய அரசின் செயற்பாடுகள் கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழா கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற போது நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

தேசிய கீதத்தினை தமிழ் மொழியில் பாட கூடாது என தெரிவித்துள்ளil கவலை அளிக்கின்றது. இவ்விடயத்தில் பலரும் கவலை அடைந்துள்ளனர்.

இதற்காக தமிழ் மக்களும்இ தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் மலையக மக்களும் ஒன்றாக அணி திரள வேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்த விடயமானது புதிதல்ல.

தனி சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டபோது நாம் எதிர்த்திருந்தோம். அவ்வாறான நிலையே இன்று தோற்றுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post