ஒற்றையாட்சி அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி - ஆபத்து என்கிறார் கஜேந்திரன் - Yarl Voice ஒற்றையாட்சி அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி - ஆபத்து என்கிறார் கஜேந்திரன் - Yarl Voice

ஒற்றையாட்சி அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டபாய அரசாங்கம் கொண்டு வர முயற்சி - ஆபத்து என்கிறார் கஜேந்திரன்

இலங்கைத் தீவு தங்களுக்கே சொந்தமானது என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் இருப்பை அழிக்கின்ற திட்டமிட்ட நடவடிக்கைகளை சிங்கள பேரினவாதிகள் முன்னெடுத்து வருகின்றதாகச் சாடியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் அதனை உறுதிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பை எம்மவர்களின் துணையுடன் கோட்டாபாய ராஐபக்ச அரசாங்கம் கொண்டு வந்து நிறைவேற்றும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண நிலையான மீன்பிடிக் கைத்தொழில் தொடர்பான வட்டமேசைக் கலந்துரையாடலொன்று யாழ் ரில்கோ ஹோட்டலில்  நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

இந்த தீவை சிங்கள பௌத்த பேரினவாதிகள் தங்களுக்குச் சொந்தமானது என்ற அடிப்படையில் தாங்கள் இந்தத் தீவில் சௌகரியமாக வாழ்வதற்கு எங்களை இல்லாமல் செய்ய வேண்டுமென்ற அடிப்படையில் தான் அவர்கள் செயற்படுகின்றார்கள். இங்கிருக்கின்றவர்களை அவர்கள் மனிதர்களாகவே கருதவில்லை. என்பது தான் உண்மையான விடயமாக இருக்கின்றது.

இங்கு பல்லாயிரக்கணக்கான எங்கiளுடைய மீனவர்கள் தங்களுடைய தொழிலை வாழ்வை இழக்கின்றார்கள். ஒருவர் இருவர் என்றில்லாமல் பல ஆயிரக்கணக்கில் எமது மக்கள் பாதிக்கப்படுகின்ற போது அதைக் குறித்து அரசாங்கம் கருத்தில் கொள்வதில்லை என்றால் இந்த தீவு சிங்கள பௌத்தர்களின் தீவு என்ற அடிப்படையிலே அவர்களின் திட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது தெளிவாகிறது.

தங்களுடைய அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக வடக்கு கிழக்கில் இருக்கக் கூடிய சிலரை தங்களுடைய கைகளுக்குள் வைத்துக் கொண்டு அவர்கள் கேட்கின்ற சிலதைச் செய்வது போல் ஒரு மாயைத் தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் தங்களுஐடய செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டு செல்கின்றார்கள்.

யாழ்ப்பாணக் குடாநாட்டிலே பல அயிரம் பேர் சொந்தக் காணிகள் இல்லாமல் இருக்கிற கொழுது நாவற்குழியில் இருக்கிற அரச காணியிலே இந்த மாவட்டத்தோடு எந்தச் சம்மந்தமும் இல்லாத தென்னிலங்கைகயைச் சேர்ந்த சிங்கள மக்கள் கொண்டு வந்து குடியேற்றப்பட்டார்கள்.

அதற்கு அரசுடன் சேர்ந்து எம்மவர்களும் துணையோகிருந்தார்கள். அதே போல வவுனியாவில் ஒரு தமிழ்க் கிராமம் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு உறுதி வங்கப்பட்டது. அதற்கு எம்மவர்களும் இணைந்து ஆதரவைக் கொடுத்தார்கள்;. இவ்வாறு தான் ஆக்கிரமிப்பும் அபகரிப்பும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு எம்மவர்களும் துணைபோய்க் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான நிலைமையில் தற்போது 13 மற்றும்; 13 பிளஸ் மற்றும் 13 மைனஸ் பற்றியெல்லாம் பேசப்படுகிறது. இதில் அது வேண்டாம் இது வேண்டும் என்றும் கருததுக்கள் தெரிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால் சத்தமில்லாமல் பட்டவர்த்தனமாக சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தக் கூடியயதாக தமிழர்களுடைய அனைத்து உரிமைகளையும் பறித்தெடுக்கக் கூடிய செயற்பாடுகள் நடக்கின்றன.

மேலும் இந்த நாட்டை பௌத்த நாடாக ஏற்றுக் கொள்கிற அரசியலமைப்பொன்று நடாளுமன்றத்திலே தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2016 ஆம் ஆண்டு தொடக்கம் அந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணியில் ஈடுபட்ட வடகிழக்கைச் சேர்ந்த அனைவரும் அதற்கு ஒத்துழைப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆகையினால் நடைபெறவிருக்கும் தேர்தலுக்குப் பின்னர் கோட்டபாய ராஐபக்சவினால் தமிழ்ப் பிரதிநிதிகளின் ஆதரவோடு அதாவது இதைத் தயாரித்தவர்களின் ஆதரவோடு கொண்டு வரப்பட்டு அது நிறைவேற்றப்பட இருக்கிறது. அவ்வாறு அது நிறைவேற்றப்படுமாக இருந்தால் தமிழ் மக்களுக்கு அது பாரிய ஆபத்தாக அமையும்.

அவ்வாறு நிறைவேறினால் குறிப்பாக மீனவர்கள் இந்த தொழிலை விட்டுவிட்டு வேறு தொழிலுக்குப் போறததைச்ப் பற்றி சிந்திக்க வேண்டும் ஏனென்றால் கடல் ஆதிக்கம் முற்று முழுதாக தமிழ்மக்களினடமிருந்த பறிக்கபப்டுகிறது. ஆகையினால் அதன் ஆபத்தை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாங்கள் தமிழர்கள் ஒரு தேசம் என்று சொல்கின்றோம். அது ஏன் என்றால் தமிழ் மக்கள் கூட்டம் அந்த பொருளாதாரம் மொழி பண்பாடு என இருக்கிற போது தான் சர்வதேசச் சட்டப்படி தேசம் என வரைவிலக்கணப்படுத்தப்படும். ஆனால் அதை எல்லாம் அழிக்கின்ற நடவடிக்கைகளையே பேரினவாதம் மேற்கொள்கிறது.

இங்கு ஒரு தரப்பு பௌத்த பேரினவாதத்துடன் இணைந்து செயற்படுகிறது. மறு தரப்பு இந்திய மேற்கு நாடுகளின் எடுபிடிகளாக செயற்படுகிறது.  இந்த தரப்புக்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஆகவே மக்கள் சிந்திக்க வேண்டும். அதனடிப்படையில் செயற்பட வேண்டும் என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post