தெற்கில் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் சொல்வதைச் செய்வதில்லை - கூட்டமைப்பு எம்பி சரவணபவன் குற்றச்சாட்டு - Yarl Voice தெற்கில் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் சொல்வதைச் செய்வதில்லை - கூட்டமைப்பு எம்பி சரவணபவன் குற்றச்சாட்டு - Yarl Voice

தெற்கில் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் சொல்வதைச் செய்வதில்லை - கூட்டமைப்பு எம்பி சரவணபவன் குற்றச்சாட்டு


மத்தியில் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கம் தமிழ் மக்களது விடயத்தில் சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாகவே இருக்கின்றதாக சாடியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் அதுவே கடந்த அரசின் கல்முனை விவகாரத்திலும் மீனவர் விவகாரத்திலும் நடைபெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பிலும் நாம் பேசுகின்ற போது அதற்குச் சாதகமாகப் பதிலளிக்கும் அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்துகின்ற போது பின்வாங்கும் நிலைமைகளே கடந்த அரசில் இருந்ததாகவும் அதனையே இந்த அரசும் தொடர்வாதகவும் தெரிவித்துள்ளார்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் வடக்கு மாகாண நிலையான மீன்பிடிக் கைத் தொழில் தொடர்பான வட்ட மேசைக்  கலந்துரையாடலொன்று யாழ் ரில்கோ ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தாவது..

வுடக்கு மாகாணத்திலுள்ள கடற்தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்தப் பிரச்சனைகளால் வாழ்வாதார ரீதியாகவும் பல பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்தப் பிரச்சனைகள் தொடர்பில் பாராளுமன்றத்திலும் நான் பேசியிருக்கின்றேன். இதற்கு மேலாக சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகளுடனுடம் பேசி மினவர்களின் கோரிக்கைகள் சம்மந்தமாக பல கடிதங்களையும் கொடுத்துள்ளேன்.

குடற்தொழில் சம்மந்தமாக இன்றைக்கு இந்த நாட்டில் இருக்கின்ற சட்டங்கள் கூட உரிய முறையில் நடைமுறைப்படத்தப்படவில்லை. அதனால் தான் பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. குறிப்பாக பாதிப்பு என்கின்ற போது வெளிமாவட்டங்களிலில் இரந்த வருகின்ற மீனவர்களினால் தான் அதிகளவிலான பாதிப்பை எதிர்நோக்குகின்றனர்.

இந்தப் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படுகின்ற தொழில் நடவடிக்கைகளை நிறுத்துமாறு பல தடவைகள் அமைச்சரிடமும் அரசாங்கத்திடமும் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான நடவடிக்கைகள் என்பது எடுக்கப்படாமலே இருக்கின்றது. 

ஆகவே ஒரு விடயத்தை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது மினவர் பிரச்சனை உட்பட தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் நாங்கள் அரசாங்கத்துடன் அல்லது சம்மந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசுகின்ற போது சாதகமான பதில்களையே வழங்குவார்கள். அனால் அதனை நடைமுறைப்படுத்துகின்ற நேரத்தில் எங்களது கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.

ஆவ்வாறு எங்கள் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுவது அல்லது நடைமுறைப்படுத்துவது என்பது மிக மிக குறைவாகவே இருக்கிறது. இதில் குறிப்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தைக் குறிப்பிடலாம். அதாவது அரசிற்கு எதிரான பிரேரனையொன்று வந்த போது நாங்கள் வாக்களிக்கப் போகாமல் இருந்தோம். ஆனால் உடனடியாக செய்து தருவதாக சொல்லப்பட்டு பல கடிதங்கள் பரிமாறப்பட்டு கொரிக்கை நிறைவேற்றப்பட்டதாகச் சொன்னார்.

ஆனால் அதன் பின் ஏதுமே நடக்கவில்லை. இன்று வரை நடக்காத நிலையே தொடர்கிறது. இப்படி தான் நாங்கள் என்ன கெட்டாலும் அவர்கள் செய்வதாகச் சொல்வார்கள் ஆனால் அதனை ஒப்பேற்றிக் கொடுக்கமாட்டார்கள். அதிலிருந்து பின்வாங்கிவிடுவார்கள். இது தான் தமிழ் மக்களின் பல விடயங்களிலம் நடக்கின்றது. இவ்வாறான நிலையில் தான் புதியதொரு அரசாங்கமும் வந்திரக்கிறது. அவர்களும் இவ்றையெல்லாம் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றார்.
;


0/Post a Comment/Comments

Previous Post Next Post