இலங்கை இரானுவத்திற்கு நிதியுதவி அளிப்பதை இந்திய அரசு நிறுத்த வேண்டும் - வைகோ வலியுறுத்து - Yarl Voice இலங்கை இரானுவத்திற்கு நிதியுதவி அளிப்பதை இந்திய அரசு நிறுத்த வேண்டும் - வைகோ வலியுறுத்து - Yarl Voice

இலங்கை இரானுவத்திற்கு நிதியுதவி அளிப்பதை இந்திய அரசு நிறுத்த வேண்டும் - வைகோ வலியுறுத்துஇலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்கள் வழங்க இந்திய அரசு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்களை கொள்வனவு செய்ய 355 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதியளித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ இன்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நிலையில்இ குறித்த அறிக்கையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

குறித்த அறிக்கையில் தொடர்ந்து தெரிவித்த அவர் இந்தியக் கடல் எல்லையில்இ மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழக மீனவர்கள் அத்துமீறி தாக்கப்படுவதாகவும்இ இலங்கை சிறையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும்இ குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன்  இலங்கையில்  தமிழர்களின் பூர்வீகப் பகுதியான வடக்கு  கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் நிலங்கள்இ வீடுகள் உள்ளிட்ட உடைமைகள் பறிக்கப்பட்டுள்ளதாகவும்இ தமிழர்கள் 24 மணிநேரமும் திறந்தவெளிச் சிறையில் இருப்பதாகவும்   தெரிவித்துள்ளார்.

இவற்றை இந்திய அரசு கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வரும் நிலையில்இ  தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கை அரசுக்கு வாரி வழங்குவது மன்னிக்க முடியாத துரோகமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்திய அரசு  இலங்கை இராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும்  என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post