பா.ஜ.கவின் தேசிய தலைவராக ஜே.பி நட்டா இன்று திங்கட் கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பா.ஜ.க.வில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற முறை பின்பற்றப்பட்டு வருவதால்இ அமித் ஷா மத்திய அமைச்சர் பதவியை ஏற்ற நிலையில் கட்சியின் செயல் தலைவராக ஜே.பி.நட்டா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் விரைவில் பா.ஜ.க.வின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பா.ஜ.க.வின் அமைப்புத் தேர்தல் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து தேசியத் தலைவர் தேர்தலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் ஜே.பி. நட்டா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment