வலிமையான நாடான இந்தியா பாசிச நடாக மாற்றப்பட்டு வருகிறது - கனிமொழி - Yarl Voice வலிமையான நாடான இந்தியா பாசிச நடாக மாற்றப்பட்டு வருகிறது - கனிமொழி - Yarl Voice

வலிமையான நாடான இந்தியா பாசிச நடாக மாற்றப்பட்டு வருகிறது - கனிமொழி

ஒரு வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என தி.மு.க  மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டிற்கான ஜனநாயகக் குறியீட்டின் உலகளாவிய தரவரிசை பட்டியலில் இந்தியா 10 இடங்கள் சரிந்து 51வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார புலனாய்வு பிரிவு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர்இ மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

குறத்த பதிவில் தொடர்ந்து தெரிவித்த அவர் ' உலக ஜனநாயக நாடுகளின் பட்டியலில்  இந்தியா ஒரே ஆண்டில் 10 இடங்களுக்கு தள்ளப்பபட்டிருப்பது இந்தியாவில் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதை உணர்த்துகிறது. வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது' என குறிப்பிட்டுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post