பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டிற்குள் மறைந்திருந்த திருட்டுச் சந்தேக நபர்களை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
தெல்லிப்பளையில் இடம்பெற்ற இச்சம்வம் தொடர்பாக தெரிய வருவதாவது..
யாழ்ப்பாணத்தின் மானிப்பாய், கோப்பாய், உள்ளிட்ட பகுதிகளிலும் களிநொச்சி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரும் நீண்ட காலமாக தலைமைறைவாகியிரந்தனர்.
இந் நிலையில் கொள்ளையிட்ட திருட்டுப் பொருட்களை விற்பனை செய்த சம்பவத்தில் மானிப்பாய் பொலிஸாரால் குறித்த இருவருட் தேடப்பட்டு வந்தனர்.
இவ்வாறான நிலைமையில் குறித்த இரு சந்தேக நபர்களும் தெல்லிப்பழையிலுள்ள தமிழ்ப் பெண் பொலிஸார் ஒருவரின் வீட்டில் மறைந்திருப்பதாக இரகசிய தகவலொன்று மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.
இதனையடுத்து குறித்த பொலிஸாரின் வீட்டை சுற்றி வளைத்த பொலிஸார் அங்கிருந்த சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இதே வேளை குறித்த தமிழ் பெண் பொலி; அதிகாரி கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கடமைக்குச் செல்லவில்லை என்றும் இவர் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்கப் போவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment