மன்னிப்பு கேட்கிறேன் - தர்சானந் - Yarl Voice மன்னிப்பு கேட்கிறேன் - தர்சானந் - Yarl Voice

மன்னிப்பு கேட்கிறேன் - தர்சானந்

நான் தனி நபர் ஒருவரையோ அல்லது ஒரு இனத்தையோ மதத்தையோ சாதியையோ குறிப்பிட்டு எந்த ஒரு வார்த்தையையும் பதிவிடவில்லை ஒவ்வையாரின் மூதுரையில் உள்ள ஓர் பாடலையே நான் பதிவு செய்தேன் அந்தப் பதிவு யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் தர்சானந்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்

என்மீது அண்மைக்காலமாக சில தவறான கருத்துக்கள் தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.சபையில் உள்ள ஒரு உறுப்பினர் திடடமிடட வகையில் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றார். தண்ணீர் போத்தலினால் தாக்குவது போன்ற செயலில் சபை மரபுகளை மீறி செயற்பட்டு வருகின்றார்.அவர் கடந்த சபை ஆடசியிலும் இவ்வாறே செயற்படடார் என்பது மக்களுக்கு தெரியும்.எனவே யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் என்ன நடைபெற்றது என்பது தொடர்பில் விளக்கமளித்த நினைக்கின்றேன்

எனது முகநூலில் எந்த ஒரு மதத்தையோ இனத்தையோ சாதியையோ தொடர்புபடுத்தி எவ்விதமான பதிவுகளையும் நான் போடவில்லை எனினும் மாநகர சபையில் உள்ள ஒரு உறுப்பினர் அதனை தங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைத்து என் மீது திட்டமிட்ட வகையில் பொய் கூறி வருகின்றார்.

நான் எனது முகநூலில் அவ்வையாரின் மூதுரையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்களை மட்டுமே பதிவிட்டு இருந்தேன் ஆனால் யாழ்ப்பாண மாநகர சபையின் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட உறுப்பினர் மட்டும் சபையை குழப்பும் வகையில் செயற்பட்டுக் கொண்டு இருந்தார்.கடந்த சில அமர்வுகளில் அந்த குறிப்பிட்ட சபை உறுப்பினர் சபை மரபுகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டு வந்தார்.அவரின் இவ்வாறான செயற்பாடுகள் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதை விட அவரின் இந்த முடடாள்த்தனமான செயற்பாடுகளுக்கு அவ்வையாரின் மூதுரையில் உள்ள ஓர் பாடலை உதாரணம் காட்டி பொதுவான பதிவை முகநூலில் போட்டிருந்தேன்.

அதனை தனக்கு ஏற்ற போல் மாற்றி நான் சபையில் குறிப்பிடாத விஷயத்தையோ அல்லது முகநூலில் குறிப்பிடாத விடயத்தை நான் கூறியதாக பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றார்.மக்களிடம் தங்களின் செல்வாக்கு எடுபடாத நிலையில் மதம்இசாதி போன்றவற்றை போன்றவற்றை பிரச்சனையாக கிளப்பி மக்கள் மத்தியில் வங்குரோத்து அரசியல் செய்வதனூடாக தங்களின் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற உள்நோக்கத்துடன் அந்த உறுப்பினர் செயற்பட்டு வருகின்றார்

நான் எனது முகநூலில் தனி நபர் ஒருவரையோ அல்லது ஒரு இனத்தையோ மதத்தையோ சாதியையோ குறிப்பிட்டு எந்த ஒரு பதிவையும் நான் பதிவிடவில்லை எனவே அவ்வையாரின் உள்ள ஓர் பாடலையே நான் பதிவு செய்தேன் அந்தப் பதிவு யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மேலும் நான்  மாநகர சபை உறுப்பினர் ஒருவர் கூறுவது போல நான் அவ்வாறான ஒரு ஜாதி பிரச்சினையோ அல்லது இனப்பிரச்சினையும் ஏற்படுத்தவில்லை

யாழ்ப்பாணம் மாநகர சபையில் நடைபெற்ற வாக்குவாதம் வார்த்தை பிரயோகம் தொடர்பில் எனது கட்சியின் தலைமைப்பீடம் என்னிடம் விளக்கம் கோரியுள்ளது நான் அதற்கான விளக்கத்தை கட்சிக்கு நேர்மையாக உண்மையாக வழங்குவேன் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு நான் முழுமையாக கட்டுப்படுவேன் எனது தரப்பு நியாயத்தையும் நான் எடுத்துக் கூறுவேன் என்பதை இந்த சந்தர்ப்பத்திலே கூறிக் கொள்கின்றேன்.என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post