பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெற்றுக்கொள்ளுமாறு ஈரான் மற்றும் அமெரிக்காவிடம் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்து - Yarl Voice பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெற்றுக்கொள்ளுமாறு ஈரான் மற்றும் அமெரிக்காவிடம் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்து - Yarl Voice

பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெற்றுக்கொள்ளுமாறு ஈரான் மற்றும் அமெரிக்காவிடம் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்து

பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வினை பெற்றுக்கொள்ளுமாறு ஈரான் மற்றும் அமெரிக்காவிடம் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகின்றது.

இந்தநிலையில் அமெரிக்காவின் வான்வழித் ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட ராணுவத் தளபதியான காசிம் சோலெய்மனி கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈராக்கில் அமெரிக்கத் துருப்புக்கள் நிலைகொண்டுள்ள தளங்களில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நேற்று முந்தினம் முன்னெடுத்திருந்தது.

இதனால்இ இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில்இ அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன்இ இரு நாடுகளும் சுய கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் எனவும்இ சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன்இ மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் அமைதி நிலவுவதற்கான நடவடிக்கைகளில் சர்வதேச சமூகம் ஈடுபடவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post