மகாத்மா காந்தியின் நினைவு தினமும் போதைப் பொருளுக்கு எதிரான வழிப்புணர்வு பேரணியும் யாழில் இடம்பெற்றது - Yarl Voice மகாத்மா காந்தியின் நினைவு தினமும் போதைப் பொருளுக்கு எதிரான வழிப்புணர்வு பேரணியும் யாழில் இடம்பெற்றது - Yarl Voice

மகாத்மா காந்தியின் நினைவு தினமும் போதைப் பொருளுக்கு எதிரான வழிப்புணர்வு பேரணியும் யாழில் இடம்பெற்றது

மகாத்மா காந்தியின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள காந்தி சிலையில் அனுஷ்டிக்கப்பட்டது.

அரியாலை காந்தி சனசமூக நிலையத்தில் இருந்து நடை பவனியாக ஆரம்பித்த காந்தி நினைவு தினம் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியாக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள காந்தி சிலை நிறைவடைந்தது.

காந்தி சிலையில் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டது நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் வடமாகாணசபையின் அவைத் தலைவர் சிவஞானம் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post