தொழில் வாய்ப்பிற்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஐனாதிபதியின் மகிழ்ச்சியான அறிவிப்பு - Yarl Voice தொழில் வாய்ப்பிற்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஐனாதிபதியின் மகிழ்ச்சியான அறிவிப்பு - Yarl Voice

தொழில் வாய்ப்பிற்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு ஐனாதிபதியின் மகிழ்ச்சியான அறிவிப்பு

தொழில் கோறும் அனைத்து பட்டதாரிகளையும் தேசிய பொருளாதாரத்தில் நேரடி பங்காளர்களாக்கும் வகையில் உடனடியாக அவர்களை அரச தொழில்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தொழில் கோறும் பட்டதாரிகளுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட வசதிகளை விரிவுபடுத்துவதற்கு நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடைய வேண்டும்.

அத்துடன் உலகின் ஏனைய நாடுகளின் தொழில்வாய்ப்புகளுக்கு பொருத்தமான வகையில் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டிய தேவையுள்ளது.

உள்நாட்டுஇவெளிநாட்டு தொழிற் சந்தைகளுக்கு பொருத்தமான வகையில் புதிய தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மூலோபாயத்தின் ஊடாகவே அதனை செய்ய வேண்டும்.

அதேநேரம் இளைஞர் யுவதிகள் தொழிற் தேடிச் செல்வதற்கு பதிலாக தொழில் வாய்ப்புகள் இளைஞர் யுவதிகளை தேடிவரும் கல்வி முறைமையொன்றை விரைவாக ஏற்படுத்த வேண்டுமென்றும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது வலியுறுத்தினார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post